50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டப்பேரவயைில் எரிசக்தி துறை மானிய கோரிக்கைக்கு பதிலுரை வழங்கிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்  

நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் எனவும் சிறப்பு முன்னுரிமை யில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் 2000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, விவசாய மின் இணைப்பு மட்டும் கொண்ட மின் பாதைகளை சூரிய ஒளி சக்தி மூலம் மின்மயமாக்கப்படும் என்றார்.

பழைய காற்றாலைகளை மாற்றி புதிய காற்றாலை மற்றும் சூரிய சக்தியுடன் இணைந்த மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்,உயர் மின்னழுத்த வினியோக அமைப்பின் மூலம் குறைந்த அளவு திறன் கொண்ட மின் வினியோக மின்மாற்றிகள் நிறுவப்படும் என அமைச்சர் கூறினார்.

மேலும் 1649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும், 166 கோடி மதிப்பீட்டில் உயர் அழுத்த மின் மாற்றிகள் திறன; மேம்படுத்தப்படும்  உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.