எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக 50 லட்சம் மோசடி..! மத்திய அமைச்சரின் உதவியாளர் மீது புகார்..!!

எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த மத்திய அமைச்சரின் உதவியாளர் உட்பட 2 நபர்கள் மீது பாஜக பிரமுகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக 50 லட்சம் மோசடி..! மத்திய அமைச்சரின் உதவியாளர் மீது புகார்..!!

எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த மத்திய அமைச்சரின் உதவியாளர் உட்பட 2 நபர்கள் மீது பாஜக பிரமுகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஜெயலட்சுமி நகரை சேர்ந்த புவனேஷ் குமார் பாஜகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 30ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் "எனது  உறவினரான திருவண்ணாமலை மகளிரணி மாவட்ட துணை தலைவராக இருக்கக்கூடிய வசந்திக்கு எம்.எல்.ஏ சீட் கேட்டு அப்போதைய பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தவரும், மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான விஜயராமன் மற்றும் பிரோக்கரான நரோத்தமன் ஆகியோரை அனுகினேன். அவர்கள் எம்.எல்.ஏ சீட்டு வாங்கி தருவதாக உறுதியளித்து என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டனர். 

இதனை நம்பி விஜயராகவன் மற்றும் நரோத்தமன் ஆகியோரிடம் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து கொடுத்தேன். மேலும் பட்டியலில் பெயர் வந்தவுடன் மீதமுள்ள 50 லட்ச ரூபாய் தருவதாக கூறினேன். இதனையடுத்து எம்.எல்.ஏ பெயர் பட்டியலில் தனது உறவினரான வசந்தியின் பெயர் வராததால் இது குறித்து அவர்களிடம் கேட்ட போது மழுப்பினர். மேலும் கொடுத்த 50 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டதற்கு தராமல் என்னை மோசடி செய்தார். பின்னர் இதுகுறித்து பாஜக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் முறையான பதில் கிடைக்காததால் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என பாண்டி பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 50 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்த தனியார் ஹோட்டலுக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். புகார் அளித்த புவனேஷ் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் குற்றம்சாட்டப்பட்ட கிஷன் ரெட்டியின் அப்போதைய உதவியாளர் விஜயராமன் மற்றும் பிரோக்கரான நரோத்தமன் ஆகியோரிடம் விசாரணை நடத்த இன்று ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என கூறி இன்று ஆஜராகவில்லை. மேலும் இந்த புகார் தொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.