பெண் வழக்கறிஞர்கள் சங்க 4 வது மாநில மாநாடு....! ”75 ஆண்டுகளுக்கு பிறகும் பெண்களுக்கு எதிராக....”

பெண் வழக்கறிஞர்கள் சங்க 4 வது மாநில மாநாடு....! ”75 ஆண்டுகளுக்கு பிறகும் பெண்களுக்கு எதிராக....”

தமிழக பெண் வழக்கறிஞர்கள் சங்க 4 வது மாநில மாநாடு இன்று கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சேஷாசாயி, பவானி சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பெண் வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் சாந்தகுமாரி, 75 ஆண்டுகளுக்கு பிறகும் ஒரு குழந்தைக்கு பாதுகாப்பாளராக பெண் என்கிற சட்ட திருத்தத்தை இதுவரை கொண்டு வராதை கண்டிப்பதோடு வருகிற காலங்களிலாவது உரிய வாய்ப்பையும், உரிய திருத்தத்தையும் கொண்டு வர வேண்டுமென முன்மொழிய வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிராக இருக்கக்கூடிய சட்டங்களை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்,

மேலும் தமிழகம் எதிர்நோக்கி இருக்கின்ற மிக பெரிய பிரச்சனையாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தான் எதிர்ப்பதாகவும், தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறை வழக்குகள், வன்புணர்ச்சி வழக்குகள் அதிகரித்து வருவதும், பெண்கள் மீதான பார்வையில் மாற்றம் கொண்டு வருவதும், அரசு இவைகளுக்கு எதிராக மாற்றம் கொண்டுவர பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க : பைக் ஓட்டுநரை தாக்கிய பஸ் ட்ரைவர் வீடியோ வைரல்...