கூட்டநெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்ததற்கு...காரணம் இதுதான்...ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

கூட்டநெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்ததற்கு...காரணம் இதுதான்...ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்காததே, திருப்பத்தூரில் 4 பேர் உயிரிழந்ததற்க்குக் காரணம் எனக்கூறி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்படியில் தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்தனர். அப்போது இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் வாங்க முயன்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 10 பேர் வாணியம் பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : திருச்சியில் பரபரப்பு...2 பெண் சடலங்கள் மீட்பு...போலீசார் விசாரணை!

இந்நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்காததால் தான் இந்நிகழ்வில் ஏராளமானோர் கூடியதாகவும், அதுமட்டுமல்லாமல் கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம், 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.