மின்சாரம் தாக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம்!!

சென்னை கோயம்பேடு அருகே கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த  4 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர்.

மின்சாரம் தாக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம்!!

கோயம்பேடு அருகே நெற்க்குன்றத்தில், தொழிலாளிகள் 4 பேர் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் தொழிலாளி ஒருவா் கீழ் தளத்தில் இருந்து, நீளமான கம்பியை தூக்கி கொண்டு மேல் தளத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் அருகே செல்லும் மின் கம்பியில் உரசி அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து காப்பாற்ற சென்ற சக தொழிலாளிகள் மூன்று பேரும் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்துள்ளனா்.   இதனையெடுத்து மின்சாரம் தாக்கிய நான்கு பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

இதே போன்று  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி  அடுக்கு மாடி குடியிருப்பில் நடைபெற்ற மின்விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். பூங்காவில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் அவர் மீது மின்சாரம் தாக்கி  சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.