370 கிலோ மாருதி காரை 25 மீ. தூக்கி சென்ற இரும்பு மனிதன்!!!

370 கிலோ எடை கொண்ட மாருதி காரை 25 மீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்று இரும்பு மனிதன் கண்ணன் சாதனை படைத்தார்.

370 கிலோ மாருதி காரை 25 மீ. தூக்கி சென்ற இரும்பு மனிதன்!!!

கன்னியாகுமரி | நாகர்கோவில் அடுத்த தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன்.எம்.ஏ. முதுநிலை பட்டதாரியான இவர் மேலகிருஷ்ணன்புதூரில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.

இவர் ஏற்கனவே ஒன்பதரை டன் எடையுள்ள லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தார். மேலும், பதிமூன்றரை டன் எடையுள்ள லாரியில் கயிறு கட்டி 4 நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து முந்தைய அவரது சாதனையை அவரே முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசுத்துறைகளின் சாதனைகளை விளக்கும்...அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு...!

அது மட்டுமின்றி, சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிளை தனது தோளில் சுமந்தபடி 42 கிலோமீட்டர் நடந்துள்ளார். இதற்கு மேலாக, ஜம்போ சர்க்கஸில் வெளிநாட்டவரின் சவாலை ஏற்று 5 கிலோ இரும்பு உருளையை ஒற்றை கையால் தூக்கி பார்வையாளர்களையும் சர்க்கஸ் சாகச வீரர்களையும் வியக்க வைத்தார்.

இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்து வந்த நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் வைத்து 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி 25 மீட்டர் நடந்து சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்க | பேசியே உலக சாதனை படைத்த கல்லூாி மாணவன்...

வெளிநாட்டில் மட்டுமே இந்த உலக சாதனை நடந்த நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக 370 கிலோ எடை கொண்ட காரை கண்ணன் அசாதாரணமாக 25 மீட்டர் தூக்கி நடந்து சென்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக கண்ணனின் இந்த சாதனை நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கலந்து கொண்டு அவருக்கு உற்சாகத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். மேலும் தான், தன்னைப் போன்று ஆர்வம் உள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டி, தான் செயல் பட்டா வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்...