குயிண்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்த 32.43 ஏக்கர் நிலம் மீட்பு...

பூவிருந்தவல்லி அருகே உள்ள குயிண்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்காவில் ஆக்கிரமித்து கட்டுப்பட்டு இருந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

குயிண்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்த 32.43 ஏக்கர் நிலம் மீட்பு...

பூவிருந்தவல்லி அருகே செயல்பட்டு வந்த குயிண்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்காவில் ஆக்கிரமித்து கட்டுப்பட்டு இருந்த நீச்சல் குளம்,இமாலய ரைட்,வாட்டர் பார்க் ,5 சொகுசு விடுதி  உள்ளிட்டவற்றிற்கு சீல் வைத்து 200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பன்சத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் அறநிலைத்துறை மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. பாப்பன்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால்சாமி கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை, குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்திருப்பதாகவும், இடத்தை காலி செய்யவும் கோரி, அறநிலையத்துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்தினர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்த பொழுது அவ்விடத்தின் உரிமையாளராக கோவிலை கருத முடியாது எனவும், இதனை அறநிலையத் துறை சார்பாக சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உரிமை இல்லை என்றனர். நிலத்தின் உரிமை தொடர்பான பிரச்சனையானது நில நிர்வாக கமிஷ்னரிடம் நிலுவையில் இருப்பதால் அறநிலையத்துறை இணை கமிஷ்னர் அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உத்தவிட்டனர். இதனை தொடர்ந்து குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அனாதினம் ஆக்கிரமிப்பு போன்ற 32.34 சென்ட் நிலத்தை வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டிருக்கின்றனர். 

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் சென்ற வருவாய்துறையினர் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அங்குள்ள ஆக்கிரமிப்பில் இருந்த நாகத்தா ஏரி ஆக்கிரமிப்பை  மீட்டு அங்கு கட்டப்பட்டு இருந்த ரோப்கார் இயக்கும் கட்டிடம், இமாலய ரைட்,நீச்சல் குளம்,பேப்பர் போர்ட்,பேட்டரி ஸ்கூட்டர்,ரயில் தண்டவாளம், என ஆகிரமிப்பில் இருந்த அனைத்திற்கும் சீல் வைத்தனர்.

குறிப்பாக விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்திருந்த பொழுது விளையாட்டு பகுதிகளில் இருந்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றிவிட்டு வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனை தொடர்ந்து குயின்ஸ்லேண்ட் நிருவனத்திற்கு சொந்தமான ப்லேசண்டே ஹோட்டலில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த ஒரு நீச்சல் குளம் 5 சொகுசு விடுதிக்கு சீல் வைத்து நோட்டீசும் ஒட்டியுள்ளனர்.

மீட்டகப்பட்ட சொத்தின் மதிப்பு மட்டுமே 200 கோடிக்கு எட்டும் என்றனர்.மேலும் பாப்பான்சத்திரம் கிராமத்தில் குயின்ஸ்லேண்ட்க்கு சொந்தமாக 177 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. அதனோடு இணைத்து இந்த 32.43 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.