தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்...!

தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில், 31வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்...!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திகொண்டதால் வாரந்தோறும் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டு, வழக்கமான மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 

மீண்டும் தொடங்கியது மெகா தடுப்பூசி முகாம்: 

இந்நிலையில், தற்போது தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து மாதத்தில் ஒருநாள் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 31வது மெகா தடுப்பூசி முகாம், நாளை தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது.

இதில், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.