
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குத்துச்சண்டை வீரர் பாலாஜியை நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குத்துச்சண்டை வீரர் பாலாஜிக்கு பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும், அதேபோல் இரண்டாயிரத்து 448 முன்களப் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.