சென்னை வந்த 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்

புனேவில் இருந்து விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள்  சென்னைக்கு  வந்தடைந்தன.

சென்னை வந்த 3.60 லட்சம் கோவிஷீல்டு  தடுப்பூசிகள்

புனேவில் இருந்து விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள்  சென்னைக்கு  வந்தடைந்தன.

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக, மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 31 பார்சல்களில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 130 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன.

அதில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 130 கோவீஷீல்ட் தடுப்பூசிகளை, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். மத்திய தொகுப்பிலிருந்து வந்த 48 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.