சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 3 ஆசிரியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜர்...
சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் 3 ஆசிரியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக உள்ள சிவக்குமார், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றி இருந்தார். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக சிவக்குமார் மீது புகார்கள் எழுந்தன.
இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டம் குறித்த சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு! மத்திய அரசு ஒப்புதல்!!
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதான குமார், அதேபகுதியில் உள்ள 6 வயது சிறுமியிடம், தன் வீட்டு மாடியில் பூனைகள் இருப்பதாக கூறி, மாடிக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதை தெரிந்துகொண்ட தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவான வழக்கில் குமார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி. கவிதா ஆஜராகி வாதிட்டார்.
மேலும் படிக்க |
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், அபராத தொகையை சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மக்களவையில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதிலளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை முடிவு செய்தது.
இதையும் படிக்க : ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் கார்த்திகி...1 கோடி பரிசு வழங்கி பாராட்டிய முதலமைச்சர்!
இதனால் 2ஆம் முறையாக ஆன்லைன் தடை மசோதாவை அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்பதால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்டவற்றிற்கு தடை கோரி சட்டம் இயற்றுவது தொடர்பாக மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், அரசியலமைப்பின் 7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை மாநில அரசுகளே இயற்றலாம் எனவும், சில மாநில அரசுகள் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.
ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது - மக்களவையில் மத்திய அரசு விளக்கம்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர் கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய தகவல் & ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், பந்தயம் & சூதாட்டம் இரண்டும் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் வருகிறது.
மேலும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் நேற்று கூட பேசினேன் நலமுடன் இருக்கிறார் - மா.சு
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டங்களை சமாளிக்கவும் அதனை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்றி உள்ளன எனவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் திறன் அடிப்படை விளையாட்டு, சூதாட்ட அடிப்படை விளையாட்டு என்பதை உச்சநீதிமன்றம் வகைப்படுத்தி இருப்பதாகவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் அலார்ட்
வேளாண்துறை வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் பட்ஜெட் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பச்சை துண்டு அணிந்துக்கொண்டு நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிக்க : ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் கார்த்திகி...1 கோடி பரிசு வழங்கி பாராட்டிய முதலமைச்சர்!
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவு தானிய உற்பத்தியில் இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டில், விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.