நாயை கொடூரக் கொலை செய்த 3 பேர் கைது....!

நாயை கொடூரக் கொலை செய்த 3 பேர் கைது....!

மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டி கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைப்பு.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அன்பழகன் நகரை சேர்ந்தவர் புவனேஷ்வர் (27). கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நண்பர் கிரண் என்பவரை சிலர் தாக்கி கொண்டிருந்த போது, அதனை தடுக்க சென்ற புவனேஸ்வர் அரிவாளால் வெட்டப்பட்டார். 

இதில் காயமடைந்த புவனேஸ்வர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

Why Dogs Bark | Cesar's Way

இந்நிலையில் மீண்டும் புவனேஸ்வரை வெட்டிய மூவரும் அவரது வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது புவனேஸ்வரின் நாய் அவர்களை பார்த்தது குரைத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் கொண்டு வந்த கத்தியால் நாயை வெட்டி கொலை செய்தனர்.

இதையும் படிக்க     | பிரிட்ஜை திறந்த பொழுது பரிதாபம் : மூதாட்டி தீக்காயம் - மகன்களுக்கு மூச்சுதிணறல் ....

 இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாயை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து சங்கர் (23), பிரபாகரன் (22), ரோகித் (22) ஆகிய மூவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க     | நிர்வாகத்தின் அஜாக்கிரதையால்,.. 58 மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ் மாயம்....!c