புதுக்கோட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது..!

புதுக்கோட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது..!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர்  உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்  தீவிர சாராய வேட்டையில் ஈடுபட 38 காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் துறையினருக்கும் தனிப்படை காவல்துறையினருக்கும் மதுவிலக்கு காவல்துறையினருக்கும் எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து,  மாவட்டம் முழுவதும் போலீசார் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கறம்பக்குடி அருகே சாத்தான் தெருவில் ராஜா என்பவரது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் கள்ளச்சாரய ஊரல் இருப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்த சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தபோது 200 லிட்டர் சாராய ஊரலும் 2 லிட்டர் சாராயமும் இருந்தது தெரியவந்ததையடுத்து அதனை அறிமுகம் செய்த போலீசார் ஊரலையும் சாராயத்தையும் கீழே கொட்டி அழித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கறம்பக்குடி மேற்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க    } விஷச்சாராய விவகாரம்...! 'மெத்தனால்' சப்ளை செய்த 5 போ் கைது .....!

இதே போல் கறம்பக்குடி அருகே உள்ள அழகன்விடுதி கிராமத்தில் கள்ளச்சாராயம் தயாரித்த அதே பகுதியைச் சேர்ந்த அஜித் குமார்(27), அழகர்(எ) அழகர்சாமியையும் கைது செய்த ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவர்களிடம் இருந்து 25 லிட்டர் சாராயத்தையும் 300 லிட்டர் சாராய ஊரலையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

இதையும் படிக்க    } " கருத்தியல் முரண்கள் இருந்தாலும்,... பாஜகவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்..!" - திருமாவளவன்.