தவளகிரி ஈஸ்வரர் மலைக்கு 2வது முறையாக தீவைத்த மர்ம நபர்கள்... அரியவகை மூலிகைகள் எரிந்து நாசம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் தீ வைத்ததால் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து நாசமானது.

தவளகிரி ஈஸ்வரர் மலைக்கு 2வது முறையாக தீவைத்த மர்ம நபர்கள்...  அரியவகை மூலிகைகள் எரிந்து நாசம்!

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலை உள்ளது.

இந்த மலையில் அரியவகை மூலிகைச் செடிகள் மரங்கள் உள்ளதால் பக்தர்கள் மாதம் மாதம் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். இங்கு மர்ம நபர்கள் சிலர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையில் தீ வைத்தபோது அரிய வகை மூலிகைச் செடிகள் எரிந்து நாசமானது.

இந்நிலையில் மீண்டும் மர்ம நபர்கள் சிலர் மலையின் மற்றொரு பகுதியில் தீ வைத்துள்ளனர். இதனால் அங்குள்ள அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் யாரும் தீயை அணைக்க வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.