2-வது டோஸ் போட்டிங்களா.. சீக்கிரம்.. தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!!

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 24-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

2-வது டோஸ் போட்டிங்களா.. சீக்கிரம்.. தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16- ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது வரை 179 கோடி டோஸ் தடுப்பூசிக்கு மேல் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. 

அதன்படி  24-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம் உள்ளிட்ட 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  

இதில் முதல் தவணை செலுத்தி காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவரை 91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 70.4 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். தமிழகத்தில் 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்.