2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் - 3 நிறுவனங்கள் தேர்வு

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் - 3 நிறுவனங்கள் தேர்வு


2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித்தடங்களில்  நீட்டிப்பு தொடர்பான  சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மூன்று நிறுவனங்கள் தேர்வு.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம்-சிறுசேரி வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் என118.9 கி.மீ. தொலைவில் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, இந்த வழித்தடங்களை நீட்டிக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க| ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யார் யாருக்கு? விளக்கமளிக்கும் முதலமைச்சர்!

நீட்டிப்பு தொடர்பாக ஆலோசனை


கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழிதடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கும் 
 மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தை , திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், அம்பத்தூர் வழியாகஆவடி வரை 17 கி.மீ தொலைவுக்கு நீட்டிக்கவும், மாதவரம் -சிறுசேரி சிப்காட் வழித்தடத்தை  சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. இந்த 3 வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஏற்கனவே  திட்டமிடப்பட்ட நிலையில், இந்த மூன்று வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | டான்ஸ் ஆடும்போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஆய்வுக்கு 3 நிறுவனங்கள்

திருமங்கலம் - ஆவடி வரை சாத்தியக்கூறுகள ஆய்வு செய்ய எல் அண்ட் டி ஐடெல்  (L&T idel )நிறுவனத்துக்கும், பூந்தமல்லி -பரந்தூர் வரைவழித்தடத்தில் ஆய்வு செய்வதற்கு ஆர்.வீ அசோசியேட்ஸ் (R.V.associates) நிறுவனத்துக்கும்,  சிறுசேரி-கிளாம்பாக்கம் வரை வழித்தடத்தில் ஆய்வு செய்ய சிஸ்ட்ரா (sistra) நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வழித்தட நீட்டிப்பிற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியை மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது