9 மாவட்டங்களில் தேர்வான 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்கின்றனர்.  நாளை மறுதினம், தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்ற பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுகுறித்து திமுக வழக்குத் தொடர்ந்ததால் 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. அதுவும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி வரையைறை காரணம் காட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார். அதன்படி பதவியேற்ற உடனேயே உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.

இதையடுத்து தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்கினர். 

இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த ஊராட்சிகளில் இன்று பதவியேற்கின்றனர். இதற்காக அனைத்து ஊராட்சிகளிலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவி ஏற்றுக் கொண்டபின்னர், நாளை மறுதினம் நடைபெறும் மறைமுக தேர்தலில் வாக்களிப்பார்கள். ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 9 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் உட்பட  மூவாயிரத்து இரண்டு கிராம பஞ்சாயத்துகளில் துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.