தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைப்பிரிவு தயார் நிலையில் இருப்பதாக மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 வார்டுகளில் 55 படுக்கை வசதிகளுடன் கூடிய 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனியாக படுக்கை வசதிகள் கொண்ட வார்டு தொடங்கப்பட்டுள்ளது.