கொத்தடிகளாக இருந்த வடமாநில சிறுவர்கள் 24 பேர் சென்னையில் மீட்பு

கொத்தடிகளாக இருந்த வடமாநில சிறுவர்கள் 24 பேர் சென்னையில் மீட்பு

சென்னை சவுகார்பேட்டை பகுதிகளில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 24 வட மாநில சிறுவர்களை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர்ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளதுதங்கப்பட்டறை, வெள்ளி பட்டறை உள்ளிட்ட சிறு தொழில் பகுதிகளில் இருந்து குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்

தொழிலாளர் நலத்துறை குழந்தைகள் நலம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் சிறுவர்கள் மீட்பு


தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்காக ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த விவகாரம் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், கொத்தடிமைகளாகவும் குழந்தை தொழிலாளர்களாகவும் சட்டவிரோதமாக குழந்தைகள் பணியமர்த்தப்படுவது தொடர்கதை ஆகவே இருந்து வருகிறது. குறிப்பாக வட மாநிலத்திலிருந்து தரகர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சிறு சிறு தொழில்களுக்கு பணியமர்த்தப்பட்டு கொத்தடிமைகளாக சிறுவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை, காவல்துறை, சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் நல துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் சென்னை சவுகார்பாட்டை பகுதியில் தங்க பட்டறைகள், வெள்ளி பட்டறைகள் ஆகிய இடங்களில் 18 வயது மற்றும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டது அறிந்து சோதனை மேற்கொண்டனர்.
அதில் 24 வட மாநில சிறுவர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அருகிலுள்ள சமூக நல கூடம் ஒன்றில் மீட்கப்பட்ட சிறுவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு

முதற்கட்ட விசாரணையில் 5000 ரூபாய் பணத்தை பெற்றோர்களுக்கு கொடுத்துவிட்டு சிறுவர்கள் அளித்துவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஓய்வின்றி 12
மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்கப்படுவதும் சம்பளம் ஏதும் கொடுக்காமல் உணவு மட்டும் கொடுத்து வேலை வாங்குவதும் சிறுவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குழந்தை தொழிலாளர் நலச் சட்டத்தின் அடிப்படையில் 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பணியமர்த்தக் கூடாது என்ற சட்டத்தை மீறி செயல்படுவதோடு மட்டுமல்லாது, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆபத்தான தொழிலில் பயன்படுத்தக் கூடாது என்ற விதிகளையும் மீறி சவுகார்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல் பயன்படுத்தப்படுவது  தெரியவந்துள்ளது

இதுபோன்று விதிகளை மீறி குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும் பெற்றோர்களுக்கு தெரிந்தே இரண்டாவது முறை குழந்தைகள் கொத்தடிமைகளாக அனுப்பப்பட்டால் பெற்றோர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறு மாதத்தில் இதே போன்ற நடத்தப்பட்ட சோதனையில் 38 வட மாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் தொடர் சோதனை நடைபெறும் எனவும் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது