இலக்கை தாண்டி சாதனை: ஒரே நாளில் 23 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி அசத்தல்

மாலை 6 மணி நிலவரப்படி மெகா தடுப்பூசி முகாம் மூலம் 23.6 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

இலக்கை தாண்டி சாதனை: ஒரே நாளில் 23 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி அசத்தல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கக அலுவலகத்தில் (டி.எம்.எஸ்)  சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது,  நடந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம்  6 மணி நிலவரப்படி 23.6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது. இன்று நடந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு அனைத்து மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில் மக்களின் வரவேற்பு உள்ளது. மேலும் தமிழ்நாடு கேரளா எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் தடுப்புக்கான வரவேற்பு அதிகமாக உள்ளது.

இம்மாதம் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.  18 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மெகா தடுப்பூசி முகாமினை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் சுகாதாரத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் தொடர்ந்து முகாமினை கண்காணித்து வருகின்றனர்.

இன்று சென்னையில் மட்டும் 1. 3 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது. மாவட்ட அளவில் சென்னையில் இன்று அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 4.6 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது.  மேலும் 80,000 தடுப்பூசிகள் வரவுள்ளது. ஆகையால் கோவேக்சின் தடுப்பூசியின் பற்றாக்குறை சரி செய்யப்படும்.  இன்று நடந்த மேகா தடுப்பூசி முகாமில் முதல் தவனை தடுப்பூசிகள் - 17.35 லட்சம் போடப்படுள்ளது. இரண்டம் தவனை தடுப்பூசிகள் - 6 லட்சம்'மும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான கருத்துகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.