எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 23 பேர் கைது    

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 23 பேர் கைது      

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 11ம் தேதி அக்கரைப்பேட்டை, சமந்தன்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இருபத்தி மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கோடியக்கரை  தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும், படகில் இருந்த 23 மீனவர்களையும் கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.