விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மொத்தம் 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, 3 அடிக்கு மிகாமல் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து, வீட்டினுள்ளேயே வழிபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவோ தடை விதித்துள்ளது. வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை தனி நபராக சென்று நீர் நிலைகளில் கரைக்கவும், இயலாதவர்கள் அருகிலுள்ள ஆலயங்களில் சிலைகளை வைத்து விட்டால், அந்த சிலைகளை விசர்ஜனம் செய்து நீர்நிலைகளில் கரைக்க அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடைத் தெருக்களுக்கு வரும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு மற்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அரசு வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை சிலைகளை கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகர் முழுவதும் சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 20 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.