உதகை உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவு.. ஜான் சலிவனின் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உதகையின் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உதகையை கண்டறிந்த ஜான் சலிவனின் வெண்கல சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உதகை உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவு.. ஜான் சலிவனின் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1815ஆம் ஆண்டு முதல் 1830ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சலிவன், 1819ஆம் ஆண்டு கோத்தகிரி சென்று, அங்கு முதல் கட்டடத்தைக் கட்டினார்.

அதனைத் தொடர்ந்து, 1822ஆம் ஆண்டு உதகையைக் கண்டறிந்து, அங்கு சென்றடைந்த சலிவன், இந்த உலகிற்கு குளுகுளு ஊட்டியை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில், உதகை உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அரசு விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 20 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஜான் சலிவனின் மார்பளவு வெண்கல சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.