200 மீட்டர் உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவ மக்கள்!

200 மீட்டர் உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவ மக்கள்!

ராமேஸ்வரத்தில் 200 மீட்டர் தூரம் கடல் உள் வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 


ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வைத்து மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் திடீரென 200 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியதால், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள்  தரை தட்டி நின்றன. இப்படி திடீரென்று கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து மத்திய கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, கால நிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கியதாகவும், சிறிது நேரம் கழித்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com