பள்ளிகள் எப்போது திறக்கும்... ஏங்கி கிடக்கும் நோட்டு புத்தகங்கள்!

சிவகாசியில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பள்ளி மற்றும் கல்லூரி நோட்டுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதால், அச்சக உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட அச்சகங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்டுகள் அச்சிடும் பணி மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறுவது வழக்கம், ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக அச்சகங்களில் கடந்த வருடம் மற்றும் நடப்பாண்டில் தயாரிக்கப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே அடுக்குமாடி கட்டிடம் போன்று வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் புரியும் தங்களக்கு, வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சக உரிமையாளர்கள் வேதனையுடம் தெரிவித்தனர். மேலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் வரை, அதாவது பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் வரை தங்களது கஷ்டங்கள் தொடரும் எனவும் கொரோனா கால கட்டம் முடிவடைந்தால் தான் தங்களுக்கு விடிவு காலம் ஏற்படும் என நோட்டு தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.