20 ஆண்டுகள் குழந்தை இல்லாத விரக்தியில் தம்பதி தற்கொலை

நெல்லை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
20 ஆண்டுகள் குழந்தை இல்லாத விரக்தியில் தம்பதி தற்கொலை
Published on
Updated on
1 min read

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்  இவரது மனைவி ராதிகா இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது இவர்களுக்கு குழந்தை இல்லை இதனால் இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தனர் இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் நேற்று நள்ளிரவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதுஉணவுகளை வழங்கினார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழவூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி ஆறுமுகம், ராதிகா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், குழந்தை இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com