தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்து வருகிறது.

இதையும் படிக்க : தீபாவளி : காவல்துறையின் 19 அறிவுரைகள்!

அந்தவகையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20 சதவீத போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும், இந்த திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைபடுத்தப்படுவதால் 212 பணியாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.