போலீசுக்கு தண்ணி காட்டும் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள்  அமைப்பு...!!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

போலீசுக்கு தண்ணி காட்டும் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள்  அமைப்பு...!!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி காவல் துறையிடம் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் முகாந்திரம் இருந்ததால் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருந்து வந்தார். இதனிடையே மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் மதுரை சென்று அவரைத் தேடி வருகின்றனர். துணை நடிகை சாந்தினி அளித்த புகார் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன . 

மதுரையில் பதுங்கியிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேடுகின்றனர். மணிகண்டனின் உறவினர் வீடு அங்கு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் மணிகண்டன் மற்றும் அவரின் மனைவி இருவரும் மதுரையில் இருப்பதாக தெரிகிறது.