2 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்

2 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்

தமிழ்நாட்டில் வெயில் விளாசியதில் இன்று 2 மாவட்டங்களில் வெப்பம் சதம் அடித்துள்ளது

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்னரே தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டத்தில் வெப்பம் 100°F தொட்டது.

இதனையடுத்து கோடைகாலத்தின் முதல் மாதமான மார்ச் மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பில், வெயிலின் தாக்கம் இயல்பை ஒட்டியும் அதற்கு கீழாகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டது.

மேலும் படிக்க | 2023-ஆம் ஆண்டு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 102.2F ஆக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்த படியாக ஈரோட்டில் 101.12°F பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இன்று 2 மாவட்டங்களில் 100°F வெப்பம் பதிவாகியுள்ளது