தொடர்மழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை
தொடர் மழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் தஞ்சை திருவாரூர் புதுக்கோட்டை மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு மேலும் இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த நிலையில் நாளை டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு ,அளிக்கப்பட்ட விடுமுறையை மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கபபட்டுள்ளது. திருச்சி, மயிலாடுறை புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.