தேங்கிய ஆற்றுநீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம் !!

செங்கம் அடுத்த பரமனந்தல் வழியாக செல்லும் செய்யாறில் தேங்கிய நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி.

தேங்கிய ஆற்றுநீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம் !!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சிக்குட்பட்ட தீபம் நகர் வழியாக செல்லும் செய்யாறில் தேங்கிய நீரில் சிக்கி அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை சுதா மகள் கீர்த்தனா (வ.11), மற்றும் செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள கே.கே.பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் கலைவாணி மகன் விஷ்ணு (வ.11) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சம்பவம் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு எடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

காவல்துறையினர் விசாரணையில் புதுப்பாளையம் கேகே பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் - கலைவாணி மகன் ஆறாம் வகுப்பு படிப்பதாகவும் தற்போது தேர்வு முடிந்து விடுமுறையில் தங்களுடைய மாமா வீட்டுக்கு சென்று உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விஷ்ணு மற்றும் பரமண்டல ஊராட்சிக்குட்பட்ட தீபம் நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை சுதா மகள் கீர்த்தனா ஆகிய இருவரும் அவ்வழியாக செல்லும் செய்யாற்றில் தேங்கிய நீரில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் சிக்கி உயிரிழந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.