2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

தருமபுரி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் நண்பர் ஸ்ரீராம்குமாருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தருமபுரி தீயணைப்பு நிலையம் அருகே சாலையை கடக்க முற்படும்போது எதிரில் அதிவேகமாக  கட்டுப்பாடு இல்லாமல் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி மற்றும் ஸ்ரீராம்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்த  இருந்த இருவரும் படுகாயமடைந்தனர். நால்வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.