உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளில் 2 தமிழக கல்லூரிகள்!

உலக அளவில் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளில் 2 தமிழக கல்லூரிகள்!

உலக அளவில் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த 2 கல்லூரிகள் உள்பட, இந்திய அளவில் 6 மருத்துவ கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி 49-வது இடத்தையும், சென்னை மருத்துவ கல்லூரி 64-வது இடத்தையும் பிடித்துள்ளது.

 டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி 23-வது இடத்திலும், புனே ராணுவ மருத்துவ கல்லூரி 34-வது இடத்திலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி 59-வது இடத்திலும், வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ கல்லூரி 72-வது இடத்திலும் உள்ளன. தரவரிசை பட்டியலில் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கிங்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தது.