தி.மு.க. பிரமுகர், திரைப்பட இயக்குனருக்கு சொந்தமான நிறுவனங்களில் ரெய்டு...

சென்னையில் தி.மு.க. பிரமுகர் மற்றும் திரைப்பட இயக்குனருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தி.மு.க. பிரமுகர்,  திரைப்பட இயக்குனருக்கு சொந்தமான நிறுவனங்களில் ரெய்டு...

சென்னை கிழக்கு பகுதி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் நடத்தி வரும் மகாலட்சுமி கட்டுமான நிறுவனம், திரைப்பட தயாரிப்பாளர் ஜவகருக்கு சொந்தமான வசந்தம் புரமோட்டர்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள், வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.  

இதனையடுத்து, சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள மகாலட்சுமி கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம், அரும்பாக்கத்தில் உள்ள வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 

நிறுவனங்களின் உரிமையாளர்கள், உறவினர்கள், அதிகாரிகளின் வீடுகள் என, 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், சோதனையின் முடிவில் அதுகுறித்த விபரங்கள் தெரிய வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.