1,958 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்... கோடம்பாக்கம் மற்றும் அடையாறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு

கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்த 1958 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

1,958 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்... கோடம்பாக்கம் மற்றும் அடையாறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த 
அமைச்சர் நேரு, தூய்மை பணியாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலனைக் கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

302.5 கோடி மதிப்பில் 24 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ரூ.10 கோடி மதிப்பில் பேரூராட்சி அலுவலக கட்டடங்கள் புதியதாக கட்டப்படும் என்றும் நேரு  அறிவித்தார்.

விவசாய விளைபொருட்களை நகர்ப்பகுதியில் சந்தைப்படுத்த ஏதுவாக நபார்டு திட்டத்தின் கீழ் 200.70 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

சென்னையில் 600 மெட்ரிக் டன் அளவிலும், மதுரை, கோவை நகரங்களில் தலா 200 மெட்ரிக் டன் அளவிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலுரையில் தெரிவிதக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக 98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்,மெரினா மற்றும் , பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக 1 கோடி மதிப்பீட்டில் நடைப்பாதை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் தற்போது உள்ள குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்தி, 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, 1958.25 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சரட் கேஎன் நேரு  அறிவித்திருக்கிறார்.