
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கீரனூர் பகுதியில் உள்ள கோபால் வீட்டில் ஓரமாக 4 மூட்டை ரேசன் அரிசியும் அதேபகுதியில் உள்ள கண்ணன் என்பவரது வீட்டின் ஓரமாக 15 முட்டை ரேஷன் அரிசி கிடப்பதாக பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபால கிருஷ்ணனுக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற அவர், 19 மூட்டைரேஷன் அரிசி அதாவது 950 கிலோ எடை அரிசியை பறிமுதல் செய்தனர்.அதன்பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை டாட்டா ஏசி வாகனம் மூலம் ஏற்றிச் சென்று தமிழ்நாடு நுகர்வோர் வாணிபகழகம் கிடங்கில் ஒப்படைத்தனர்.