ஈ.பி.எஸ் அணியில் அதிகரிக்கும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை...!

ஈ.பி.எஸ் அணியில் அதிகரிக்கும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை...!

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் இருவரும் மோதிக்கொண்டு இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக  மேலும் 18 பேர் இணைந்ததால், ஈ.பி.எஸ் க்கு ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது இரண்டாயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது.

பொதுக்குழு நடைபெறுமா? தீர்ப்பு யாருக்கு சாதகம்:

அதிமுகவில் நடைப்பெற்று வரும் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் யார் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்கப்போவது என்ற உச்சக்கட்ட போட்டி ஓ.பி.எஸ்க்கும், ஈ.பி.எஸ்க்கும் இடையே அரங்கேறிவருகிறது. இதனால் சட்டப்படி நிதிமன்றத்தில் சமபலத்தில் மோதிக்கொள்கின்றனர். இதனிடையே ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைக்கோரிய வழக்கு தொடர்ந்து இரண்டு நாள் நடைபெற்ற நிலையில், வருகிற திங்கட்கிழமை ஜூலை 11 ஆம் தேதி காலை 9 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் ஒத்திவைத்திருக்கின்றனர். அதேநாளில் காலை 9.15 மணியளவில் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்திருக்கின்றனர். எனவே, நீதிபதி தீர்ப்பை பொறுத்தே பொதுக்குழு நடைபெறுமா என்பதை தீர்மானிக்க முடியும்.  ஒருவேளை நீதிமன்றத்தில் தீர்ப்பு என்பது ஈ.பி.எஸ்க்கு சாதகமாக வந்தால், எடப்பாடி பழனிசாமி உடனடியாக பொதுக்குழுவை கூட்டி, தனது ஆதரவாளர்களின் பலத்தால் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்படுவார். இந்நிலையில் தான் ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறுமா? தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்று உற்று கவனிக்க வேண்டி இருக்கிறது.

பொதுக்குழுவில் பங்கேற்க தயாராகி வரும் ஈ.பி.எஸ் ஆதராவளர்கள்:

ஆனால், ஈ.பி. எஸ் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடந்தே தீரும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து பொதுக்குழு நடத்துவதற்கான பணிகளிலும்  தீவிரம் காட்டி வருகின்றனர். எப்படியென்றாலும், வழக்கு விசாரணையின் முடிவில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்ற நம்பிக்கையில் உற்சாகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுக்குழுவில் பங்கேற்க தயாராகி வருகின்றனர். பொதுக்கூட்டம் தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

வலுக்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை:

அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தில் என்னதான் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் சம பலத்தில் மோதி கொண்டாலும் ஒ..பி.எஸ் விட ஈ.பி.எஸ்க்கே ஆதரவாளர்கள் என்பது அதிகம். அந்த வகையில் அதிமுகவில் மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மேலும் 18 பேர் ஆதரவு நிலைப்பாட்டை  எடப்பாடி பழனிச்சாமிக்காக அறிவித்ததால், ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஈ.பி.எஸ் தரப்பு என்பது பலம் பொருந்திய அணியாக பார்க்கப்படுகிறது.