தடுப்பூசி தட்டுப்பாடா? 2 வது டோஸ் போட காத்திருக்கும் 16 லட்சம் பேர்…  

தமிழகத்தில் 16.1.2021 முதல் 10.7.2021 வரை தடுப்பூசி செலுத்தி கொண்டர்களில் 16 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்த காத்து இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடா? 2 வது டோஸ் போட காத்திருக்கும் 16 லட்சம் பேர்…   

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் இரண்டாம் அலையின் படிபடியாக குறைந்து வரும் நிலையில் அதனை முழுமையாக குறைக்க வேண்டும் என்றால் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி  போடும் பணி தொடங்கியது, தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொது மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்தமாக 2,69,06,830 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் நேற்று வரை 2,57,71,129 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கைவிட இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 16.01.2021 முதல் 10.07.2021  வரை கோவாக்சின் தடுப்பூசி 56,40,48 பேரும்,  கோவிஷூல்டு தடுப்பூசி 10,48,575 பேரும் என 16 லட்சம் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் காத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களுக்கு என்று வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தடுப்பூசி சிறப்பு முகாமும் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.