கள்ள சாராயத்திற்கு பயன்படுத்தும் 1500 கிலோ வெல்லம் பறிமுதல்- ஒருவர் கைது

கள்ள சாராயத்திற்கு பயன்படுத்தும் 1500 கிலோ வெல்லம் பறிமுதல்- ஒருவர் கைது

Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தம்,பேர்ணாம்பட்டு பகுதியில் சாராய அழிப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பேர்ணாம்பட்டு உள்ளிட்ட மலை பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார் சோதனையின் போது இரு கள்ளச்சாரய வியாபாரிகளை  கைது செய்தனர்.

 மேலும் கள்ள சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் வெல்ல மூட்டைகள் குடியாத்தம் பகுதியில்  வாங்குவது என விசாரணையில் தெரியவந்தது 

இதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீஸார் நெல்லூர்பேட்டை பகுதியில் வெல்ல குடோனில் ஆய்வு மேற்கொண்டதி அப்பொழுது கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் 40 மூட்டைகளில்  சுமார் 1500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்தனர்  மேலும் வெல்லம் மண்டி உரிமையாளர் மோகன் என்பவரை கைது செய்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com