சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 ராஜ நாகம், 2 ஆமைகள், 1 குரங்கு குட்டி பறிமுதல்.. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!!

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 ராஜ நாகம், 2 ஆமைகள், 1 குரங்கு குட்டி பறிமுதல்.. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!!

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைபாம்பு, ராஜநாகம், குரங்கு, ஆமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தல் பொருள்கள் 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கடத்தல் பொருள்கள் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

காட்டு விலங்குகள் 

அப்போது தாய்லார்ந்து சுற்றுலா சென்று சென்னை திரும்பிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்த போது காட்டு விலங்குகள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வன விலங்கு அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு செய்ததில், 1குட்டி குரங்கு, 15 ராஜ நாகம் குட்டிகள், 5 பந்து மலை பாம்பு குட்டி, 2 ஆமைகள் இருந்துள்ளன.

தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பி வைப்பு

இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்யாமல் வன விலங்குகளை கடத்தி வந்ததால் அவற்றை திரும்பி தாய்லாந்து செல்லும் விமானத்தில் அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பாக வாலிபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.