அடேங்கப்பா.. எவ்வளவு பெரிய முருகன் சிலை.. எத்தனை அடி தெரியுமா?.. ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்கள்!!

சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலைக்கு வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அடேங்கப்பா.. எவ்வளவு பெரிய முருகன் சிலை.. எத்தனை அடி தெரியுமா?.. ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்கள்!!

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் 140 அடி உயரத்தில் முருகன் சிலை உள்ளது.

எனவே முருக பெருமானை இந்திய சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான வெளிநாட்டினர் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் 146 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலை மலேசியா, பத்துமலை முருகன் சிலையை விட பெரியது. உலகில் மிகப் பெரிய உயரம் கொண்ட இந்த சிலையை, பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த, ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் வடிவமைத்துள்ளனர்.

இந்த நிலையில், மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் முத்துமலை முருகன் சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக  நடைபெற்றது. அப்போது  ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. பிரம்மாண்டமாக அமைக்கபட்டுள்ள  முருகன் சிலையை காண மக்கள் கூட்டம் கூட்டாமாக முத்துமலைக்கு குவிந்து வருகின்றனர்.