திருவாரூரில் 14 ஐம்பொன் சிலைகள் கண்டுடெடுப்பு..!

Published on

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டியபோது 14 ஐம்பொன் சிலைகள் கண்டுடெடுக்கப்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா நெம்மேலி பஞ்சாயத்து குச்சிபாளையம்  கிராமத்தில் பெருமாள் கோயில் அருகே குடிநீர்குழாய்க்காக  பள்ளம் தோண்டியபோது 14ஐம்பொன் சிலைகள் கண்டுடெடுக்கப்பட்டது.

இன்று காலை பொக்லைன்  மூலம் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது மண்ணுக்கடியில்  இரண்டு அடி ஆழத்தில் நடராஜர் சிலை இருப்பதை கண்டவர்கள் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

  இதையடுத்து அதிகாரிகளின் முன்னிலையில் தொடர்ந்து பள்ளம் தோண்டியபோது,தோண்ட தோண்ட சுமார் 14 ஐம்பொன் சிலைகள்,துருவாச்சி போன்றவை கிடைத்தன.

இயந்திரத்தால் நடராஜர் சிலை சேதமடைந்தது,2 அடி உயரமுள்ள நடராஜர்,சிவகாமசுந்தரி,வினாயகர்,சோமாஸ்கந்தர்,சண்டிகேஸ்வரர்,மற்றம் சில சுவாமி சிலைகள்,திருவாச்சி  என 14 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பாதுகாப்பாக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.அவற்றை நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன் பார்வையிட்டு அய்வு செய்து அவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக நன்னிலம் தாசில்தார் அலுவலகம்  கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com