13,435 டன் குப்பைகள் அகற்றம்... மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை... 

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரதூய்மைப் பணிகளில் இதுவரை 13,435 டன் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13,435 டன் குப்பைகள் அகற்றம்... மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை... 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகளையும் கட்டிட கழிவுகளையும் அகற்றி தூய்மைப்படுத்த தீவிர தூய்மைப்பணி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் இரண்டு வாரங்களாக மாநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளில் இதுவரை மொத்தம் 13345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. 
 
இதில், 3260 டன் சாதாரண கழிவுகளும், 10085 டன் கட்டிட கழிவுகளும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றை  மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  
 
அதன் தொடர்ச்சியாக, தீவிர தூய்மைப் பணிகளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 614 இடங்களில் ஜூன் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை நீட்டிக்கவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்பேடி உத்தரவிட்டுள்ளார்.