இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!

இன்று  முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!


நேற்று காலை 10 மணிக்கு  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில். இன்று காலை 11:00 மணி முதல் வருகிற 13-ஆம் தேதி வரை மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது விடைத்தாள்கள் நகலை பெற தங்கள் பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள் என்றால் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Revaluation of Answer Sheets : No fee for failed Inter students

மேலும், விடைத்தாள் நகலை பெற பாடம் ஒன்றுக்கு 275 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூபாய் 305 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தின் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண் பயன்படுத்தி மாணவர்கள் மறு கூட்டல் முடிவுகளை அறிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

CBSE 10,12 Board Term 1 Exams: No student to be declared pass or fail,  final evaluation after 2nd term; results expected in Jan

கூடுதல் தகவல்களுக்கு www.dge.tn.nic.in என்கிற இணையதளத்தை மாணவர்கள் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

 இதையும் படிக்க     }