உக்ரைனில் இருந்து சென்னை திரும்பிய 122 மாணவர்கள்...ஆரத்தழுவி வரவேற்ற பெற்றோர்கள்.!!

உக்ரைனில் இருந்து  டெல்லி வழியாக 13 விமானங்களில் 122 பேர் சென்னை வந்தனர்

உக்ரைனில் இருந்து சென்னை திரும்பிய 122 மாணவர்கள்...ஆரத்தழுவி வரவேற்ற பெற்றோர்கள்.!!

உக்ரைனில் போர் நடப்பதால் கடந்த சில தினங்களாக இந்தியா அரசு சிறப்பு விமானங்கள் இயக்கி இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்தன. தமிழகத்திற்கு  6-வது நாளாக 13 விமானங்களில் சென்னை, திருச்சி, உள்பட பல பகுதிகளை சேர்ந்த 122 மாணவ- மாணவிகள் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

மாணவர்களை கண்டதும் குடும்பத்தினர் கட்டி பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.   பின்னர் அவர்கள் அனைவரும்  சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து 27 பேர் கோவைக்கும், ஒருவர் பெங்களுருக்கும் 4 பேர் திருவனந்தபுரத்திற்கும்  விமானம் முலம் தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.