ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு...!!

ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு...!!

புதிய பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கு நிதி மற்றும் இதற்கு காரணம் அல்ல மாணவரின் சேர்க்கை தரம் அதை பொறுத்துதான் கல்லூரிகள் திறக்கப்படும்.

சட்டப்பேரவை கூட்ட தொடரின் போது வினாக்கள் விடை நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி அமைப்பதற்கான அரசு முன்வருமா என்று சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி எழுதிய கேள்விக்கு பதில் அளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.

அந்தப் பகுதியில் அரசு கலைக் கல்லூரி உருவாக்கப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது எனவும் அந்தப் பகுதியில் பல்வேறு கல்லூரி தற்போது அமைத்தால் அங்கு மாணவர்கள் சேர்க்கை என்பது அதிக அளவில் சேர்வது இல்லை எனக் கூறிய அமைச்சர் ஆனால் இந்த ஆண்டு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக 1000 ரூபாய் வழங்கிய பிறகு  பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டு 10,500 மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை திறன்மிகு மையமாக மாற்ற வரும் ஆண்டில் திட்டமிட்டு இருக்கிறோம் எனவும் பாலிடெக்னிக் கல்லூரி, பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 

புதிய பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கு நிதி மட்டுமே இதற்கு காரணம் அல்ல மாணவரின் சேர்க்கை தரத்தை பொறுத்துதான் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமாக 2940 இடங்கள் உள்ளது எனக் கூறிய அமைச்சர் அதில் 1023 இடங்களுக்கு  மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளது எனவும் தெரிவித்தார்.  மேலௌம் மீதமுள்ள இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது எனவும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றுகிற ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
 
இதையும் படிக்க:   கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிப்பு..!!!