திருமண மண்டபத்தில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்து  11ஆம் வகுப்பு மாணவன் பலி...! போலீசார் விசாரணை

திருமண மண்டபத்தில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் பலி...! போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், லிப்ட் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவிற்கு கும்மிடிப்பூண்டியில் சொந்தமாக திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது கேட்டரிங் ஊழியர்கள் 3 பேர் உணவு பொருட்களை லிப்டில் கொண்டு சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் ரோப் அறுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கேட்டரிங் ஊழியர்களில் ஒருவரான 11ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com