அரிக்கேன் விளக்கில் படித்து அதிகமதிப்பெண் எடுத்த 10ம் வகுப்பு மாணவன் சாதனை: வீட்டுக்கு மின்வசதி வேண்டி கோரிக்கை!!

சிவகங்கை மாவட்டம் சோலுடையான்பட்டியில் அரிக்கன் விளக்கில் படித்து 483 மதிப்பெண் பெற்ற மாணவனின் வீட்டுக்கு மின்வசதி செய்துதர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 

அரிக்கேன் விளக்கில் படித்து அதிகமதிப்பெண் எடுத்த 10ம் வகுப்பு மாணவன் சாதனை: வீட்டுக்கு மின்வசதி வேண்டி கோரிக்கை!!

சோலுடையான்பட்டி கிராமத்தில் தந்தையை இழந்து தாய் குடும்பத்தினரின் அரவணைப்புடன் படித்து வந்தவர் அஜெய்குமார். வீட்டில் மின்சார வசதி இல்லாததால் காலையில் பள்ளியிலும் மாலையில் இல்லம் தேடிக் கல்வி வகுப்பிலும் 10ம் வகுப்புத்தேர்வுக்கு அஜெய்குமார் தயாராகி வந்தார். இரவில் வீட்டுக்கு வந்து கண்எரியும் வரை அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் படித்து விட்டு உறங்கச் சென்று விடுவார். இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில், 10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500க்கு 483 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். இந்நிலையில் மின்வசதி இருந்திருந்தால், இன்னும் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்க முடியும் எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் வீட்டுக்கு மின்வசதி செய்து கொடுத்து மாணவனின் கல்விக்கு உதவ அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.