100 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்து விபத்து

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 100ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

100 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்து விபத்து

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 100ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் அடுத்த வடகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சுப்பையா என்பவருக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது. இந்நிலையில் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, 100 ஆண்டுகள் பழமையான அந்த வீடு திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் பக்கத்து வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருந்த ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.