தமிழக இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...

தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி என்றும்,அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களால் 13.092021 அன்று நிகழ்த்தப்பட்ட 2021-2022-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேனண்மைத் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான உரையின் போது, பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது:

"தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்",என்று அறிவிக்கப்பட்டது.

மாண்புமிகு அமைச்சர் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் அரசுக்கு அளித்த கருத்துருவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உdள அனைத்துத் தெரிவு முகமைகளால் அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும், நியமன அலுவலர்களால் தேவைப்படும் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாளினை தகுதித் தேர்வாக கட்டாயமாக்க அரசு முடிவு மேற்கொண்டு, அவ்வாறே ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

மேற்படி ஆணையினைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினைப் பொருத்த வரையில், கட்டாயத் தமிழ் மொழித் தேர்வு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பின்வரும் வழிவகைகளில் நடத்தப்படும்:தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழ்மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி, நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marksp கட்டாயமாக்கப் படுகிறது.தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

தொகுதி-I. II மற்றும் IIA ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை (Preliminary Examination) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) என இரண்டு நிலைகளைக் (Two stages of Examination) கொண்டதாக உள்ள தொகுதி 1, 11 மற்றும் IIA ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது. முதன்மைத் தேர்வுடன் (Main Written Examination) விரிந்துரைக்கும் வகையிலான (Descriptive Type) தேர்வாக அமைக்கப்படும்.

மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும்.

இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித்தாளில் (Qunlifying Paper) குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying marks) பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் (Main Written Examination) இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.
ஒரே நிலை கொண்ட (Single stage Examination) தேர்வுகளின் (தொகுதியா மற்றும் IV) நடைமுறைகள் விவரம்.

தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் உள்ள மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும். அதாவது, தொகுதி III,IV போன்ற ஒரே நிலை கொண்ட (Single stage Examination) தேர்வுகளுக்கு, தமிழ்மொழித்தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக (Tamil Eligibility - Cum - Scoring Test) நடத்தப்படும். இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி-அ என கொள்குறி வகையில் (Objective Type) அமைக்கப்படும்.

பொது அறிவு + திறனறிவு (Aptitude) - மனக்கணக்கு நுண்ணறிவு (Mental Ability) ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி ஆ என கொள்குறி வகையில் (Objective 'Type) நடத்தப்படும். பகுதி அவில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying: Mark பெற்றால் மட்டுமே பகுதி ஆ-வில் எழுதிய தேர்வுத்தாளும்; இதர தாட்களும் மதிப்பீடு செய்யப்படும். இவ்விரண்டு பகுதிகளின் (பகுதி அ மற்றும் ஆ) அனைத்துத் தாட்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒரே நிலை கொண்ட (Single stage Examinatioo இதர போட்டித் தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்:

தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும். மேற்படி தமிழ்மொழி தேர்வானது,பகுதி -அ என கொள்குறி வகையில் (Objective Type) 150 மதிப்பெண்களுக்கு தகுதித்தேர்வாக மட்டுமே நடத்தப்படும். தரவரிசைக்கு இம்மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படாது.

இத்தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marloo) பெற்றால் மட்டுமே. பகுதி ஆ மற்றும் இதர போட்டித் தேர்வுத்தாள்/தாட்கள் மதிப்பீடு செய்யப்படும். இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர தெரிவு முகமைகளைப் பொருத்தவரையில், கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும். அவ்வாறே தமிழ்நாடு அரசுப் பொதுத்துறை நிறுவனங்களைப் பொருத்தவரையில், தேவையான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் நிதி (பொதுத்துறை நிறுவனங்களின் மாநிலக் கழகம்) துறையால் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.